ரமளானின் மகிமை

புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.

ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.

இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:

அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்??

நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்??

நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்??

சுவனலோகத்தில் ?ரய்யான்? என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்??

நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.

படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்??

வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது??

ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்??

எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!

நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை

நோன்பு நோற்பது ஃபர்ளு ? கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.

நோன்பு நோற்பது ஃபர்ளு ? கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.

நோன்பின் நிய்யத்

நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.

தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:

நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.

நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

ஸஹர் ? நோன்புபிடிப்பது

ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.

ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.

இஃப்தார் ? நோன்பு திறப்பது

சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

மேகத்துடைய காலங்களில் இஃப்தார் ? நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் ? நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.

இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி ? பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.

நோன்பு திறக்கும் துஆ

அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

நோன்பின் முறித்தல்கள்

1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ?களா? செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.

நோன்புடைய கப்பாரா – பரிகாரமாகிறது.

தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.

நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிக்காதவைகள்

1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்?ஷன் ? டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.

நோன்பின் மக்ருஹ்கள்

1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.

இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.

நோன்பு வைக்காமலிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்

1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ?களா? செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ?களா? செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ?களா? செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 ? மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.

5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.

6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ?களா? செய்யவேண்டும்.

7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ?களா? செய்வது கட்டாயமுமாகும்.

8 மாதவிடாய் , நிபாஸ் ? பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ?களா? செய்வது கட்டாயமாகும்.

தராவீஹின் சட்டங்கள்

புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.

எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது ? குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.

குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.

இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.

வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.

ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.

குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் ? மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.

இஃதிகாப்

புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.

ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.

இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.

இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.

ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.

1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.

2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.

அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

கவலைகள் அகல… உறுதியான ஈமான்..Worry Free Life…

Very good article in Tamil by Janab Sheik Mohamed KaraKannu on Stress & Patience. If you know to read tamil, please dont miss it. Click the below link to view the pdf document.

Worry free life

Thanks to Mr. Jamal Mohamed (Thuckalay) for sending the scanned copy from the tamil magazine “Samarasam”

மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில்,
ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)
*

*அழகிய வரவேற்பு*
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு
வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது
நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும்
பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு
சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

*இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்*
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான
வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில்
மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

*நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்*
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது
மீட்டிப் பாருங்களேன்.

*விளையாட்டும் கவன ஈர்ப்பும்*
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ,
குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ
இருக்கலாம்.

இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு
வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள்
போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.

*வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ*
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம்
உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.

கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப்
படுத்துங்கள்.

*இனியவளின் ஆலோசனை*
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.

அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத்
தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள்
போன்றவை)

மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின்
கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.

ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

*பிறரைக் காணச் செல்லும்பொழுது*
மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம்
நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான
பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).

அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது
நல்லதல்ல.

*உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது*
மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில்
விடைபெறுங்கள்.

உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான
அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.

குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.

நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில்
போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான்
இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின்
மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.

திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக்
கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை
ஏற்படுத்தும்).

பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச்
செல்லலாம்.

*பொருளாதார உதவி*
கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல்
வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).

அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை
அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக்
கொள்ளுங்கள்.

அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான்
சிறந்தது.

*அழகும் நறுமணமும்*
நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை
நீக்கிவிடுவது.

எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

*தாம்பத்யம்*
மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில்
வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக்
கொள்ளலாம்).

பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான
பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு
ஆரம்பியுங்கள்.

இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம்
அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).

பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை
கடந்துவிடாதீர்கள்.

மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான
சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

*இரகசியங்களைப் பாதுகாத்தல்*
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம்
எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.

*இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது*
தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.

உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.

காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித்
தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.

இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.

ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச்
செல்லுங்கள்.

மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.

அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.

உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது
அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.

உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன்
இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.

*இஸ்லாமியப் பயிற்சி*
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால்
முடிந்த உதவிகளை செய்வது :

– இஸ்லாத்தின் அடிப்படை
– அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
– படித்தல் மற்றும் எழுதுதல்
– இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக
ஆர்வமூட்டுவது
– பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
– வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள்
வாங்குவது.

*மேன்மையான அக்கறை*
வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக்
கவனித்துக் கொள்வது.

மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய
மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக
இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

*அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது*
உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து
கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப்
பேசியிருக்கலாம்.

அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள்.
(ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக்
கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)

*பொறுமையும் சாந்தமும்*
மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான்
(வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு
உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய
விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும்
அளவுக்குச் சென்று விடுகிறது.

இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக
தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை
டி.வியில் பார்த்தல் இது போன்றவை.

உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.

*தவறுகளைத் திருத்துதல்*
முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.

அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப்
படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது)
அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில்
சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.

அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக
அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).

மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள்
மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்.

மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை
அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக
நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச்
சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த
அனுமதியைப் பயன்படுத்தலாம்.

குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு
நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான்
அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.

காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.

செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும்
ஈடுபடக் கூடாது.

*மன்னிப்பும் கண்டிப்பும்*
பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில்
தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின்
நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).

எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை
வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல்
உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).

சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள்.
நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால்
சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர
எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.

தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச்
சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக்
கொள்ளுங்கள்.

பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை
பொருத்திருங்கள்.

மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.

*உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!*

Courtesy : Mr. Abdul Rasheed Sait

ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு  நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நன்மை – தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

தலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கருப்பன் – சிவப்பன் என்ற நிறவெறியை காலில் போட்டு மிதித்து அனைவரும் ஆதம் என்ற ஒரு மனிதரின் பிறப்புகளே என்று முழங்கிய அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அழகிய உபதேசங்களை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பெண் இனத்தின் உடலில் உயிரோட்டம் இருக்கிறதா ? என்ற ஆய்வுக்குட்படுத்திய சித்ரவதையிலிருந்து மீட்டெடுத்து அவளும் உன்னைப் போன்ற மனித இனமே என்று முழங்கி பெண் இனத்தை அழிவிலிருந்து மீட்டி சமூக நீதிக்காத்த திருமறைக்குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஆண்டவன் பெயரால் அப்பாவி மக்களை சுரண்டி வயிறு வளர்த்த புரோகிதக் கூட்டங்களை ஒழித்துக்கட்டி அல்லாஹ் ஒருவன் என்றக் கொள்கையை முழங்கிய மாமறைக் குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

அன்புள்ள சகோதரர்களே !

நன்மைகள் அதிகரிக்கவும் பாவங்கள் மன்னிகப்படவும், நல்ல எண்ணத்துடன் ரமளான் மாதத்தை அணுகுங்கள் அவரவரின் எண்ணத்திற்கேற்ப அவரவர்களுககு கூலி வழங்க காத்திருக்கிறது  ரமளான் நோன்பு.

ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.’ நூல்: புகாரி. 1899.

ரமலான் மாதத்தில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) கூறினார். நூல்: புகாரி.1901

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

Courtesy : அதிரை ஏ.எம்.பாரூக்

அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

ஏக இறைவனின் திருப்பெயரால்….

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ {60

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான். திருக்குர்ஆன். 40:60


அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

பொக்கிஷங்களின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனின் அடியார்கள் கேட்கும் பொழுது இல்லை என்று சொல்லாமல் கைநிறைத்து அனுப்பக் கூடிய கருளையாளன் ஆவான்.

கொடையாளனும், கருணையாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து கை நிறையப் பெற்றுக் கொள்ள  வேண்டுமென்றால்? அவனின் கருணைக்கு உகந்த அடியாராகத் திகழ வேண்டும்,

கையேந்துபவர்

Ø  கையேந்துவதற்கு முன் அவருடைய உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்க வேண்டும்,

Ø  அவரது நாவு திக்ருகளால் (இறைவனை துதிப்பதில்) திளைத்திருக்க வேண்டும்.

Ø  அவரது எண்ணங்கள் ஹலாலானவைகளை நாடி இருக்க வேண்டும்,

Ø  அவரது கரங்கள் ஹலாலானவைகளை ஈட்டி இருக்க வேண்டும்,

Ø  அவரது உடல் உறுப்புகள் ஹலாலானவைகளை அனுபவித்திருக்க வேண்டும்.

இதன் பின்னரே, அவரால் இறைவனை நோக்கி ஏந்தப்பட்ட அவரது கரங்கள் வெறுமனே திருப்பி அனுப்பப்படுவதில்லை.

”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;…. 40:60

…அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்” (எனவும் அவர் கூறினார்.) 7:87

அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள். ஏனெனில், தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் விரும்புகிறான். ஆதார நூல்: திர்மிதி.

கருளையாளனாகிய அல்லாஹ் அவனிடம் பிரார்த்திப்போரின் பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறான், தீர்ப்பும் கூறுகிறான், அந்த தீர்ப்பு நிறைவேறும் காலத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு விடுவான்.

பிறருக்கும், தனக்கும் தீங்கு விளைவிக்காத நியாயமான எந்தக் கோரிக்கையையும் இறைவன் மறுப்பதில்லை. பாவமான காரியங்களுக்காகவும், இரத்தபந்த உறவுகளை துண்டிப்பதற்காகவும் கேட்கப்படும் பிரார்த்தனைகளைத் தவிர மற்றவை ஏற்றுக் கொள்ளப்படும்’ என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: புஹாரி.

அன்றும் நடக்கும், நின்றும் நடக்கும்.

பிராரத்திப்போரின் பிரார்த்தனைகளில் சிலவற்றை அன்றே நிறைவேற்றியும் கொடுப்பான், சிலவற்றை நின்றும் (காலம் தாழ்த்தி) நிறைவேற்றிக் கொடுப்பான்.

எத்தனையோ முறை அழுதுகேட்டும் காரியம் நடப்பதாக தெரியவில்லையே என்று பிராரத்திப்போருக்கு அல்லாஹ்வின் ஆற்றலின் மீது நம்பிக்கையற்ற சிந்தனை எழலாம். ( ஷைத்தான் இவ்வாறு சிந்திக்கத் தூண்டுவான்) இதன் காரணமாகவே உருவானது தான் தர்ஹாக்களும், பால்கித்தாபு ஜோதிடர்களும்.  நான் பிரார்த்திக்கிறேன், எனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையே, என்றுக்கூறி அவசரப்படாத வரையில் உங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி.

அண்ணல் அவர்களின் வாழ்வினிலே…

அகிலம் அனைத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி (ஸல்)அவர்களின்  நெருக்கடியான நேரத்தில் அல்லாஹ்விடம் கையேந்தி கேட்ட பிரார்த்தனைகளில் சிலவற்றை அல்லாஹ் அன்றே நிறைவேற்றியும் கொடுத்திருக்கிறான், சிலவற்றை காலம் தாழ்த்தியும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றான்.

அண்ணல் அவர்கள் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்களை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொண்டால் விரக்தி அடைந்து வேறு வழியைத்தேடி ஈமானை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது ஏகத்துவத்தில் உறுதியாக நிற்பதுடன் பிறருக்கும் முன்மாதிரியாகி விடலாம்.

அன்றே நிறைவேற்றப்பட்ட பிரார்த்தனை.

இறைத்தூதர்(ஸல்)அவர்களும், அபூபக்ர்(ரலி) அவர்களும் மக்காவிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றுக் கொண்டிருந்த பொழுது அபூபக்ர்(ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அப்பொழுது அவர்களுக்குப் பின்னால் ஒரு குதிரை வீரர் (சுராகா) என்பவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். உடனே அபூபக்ர்(ரலி) அவர்கள் இறைத்தூதர் அவர்களே! ஒருக் குதிரை வீரர் நம்மை நெருங்கி விட்டார் என்றுக்கூறினார்கள். திரும்பிப்பார்த்த இறைத்தூதர்(ஸல்)அவர்கள் இறைவா! அவரைக் கீழே விழச்செய்! என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது பிறகு குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்றதும். குதிரை வீரர் சுராகா மனம் திருந்தி, ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள் (நிறைவேற்றுகின்றேன்) என்றுக்கூறினார். அதற்கு இறைத்தூதர் (ஸல்)அவர்கள், இங்கேயே நின்றுகொண்டு எங்களை பின்தொடர்ந்து வரும் எவரையும் (எங்களை பின் தொடர) விட்டு விடாதே என்று கூறினார்கள். இந்த சுராகா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப் போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார்…புகாரி 3911. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

புளுதியை கிளப்பிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவரும் குதிரையை இன்னும் வேகமாக விரட்டிக்கொண்டு கையில் ஆயுதத்துடன் அண்ணல் அவர்களை குறிவைத்தவராக நெருங்கிக் கொண்டிருக்கின்றார்.

அது கண் இமைக்கும் நேரத்தில் அண்ணல் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதால் ஞானம் நிறைந்த அல்லாஹ் அண்ணல் அவர்களின் பிரார்த்தனையை தாமப்படுத்தாமல் அதே இடத்தில் நிறைவேற்றிக் கொடுத்து, கொல்ல வந்தவரையே அவர்களுக்கு எல்லை பாதுகாப்பு வீரராக மாற்றி விடுகின்றான்.

நின்று நிறைவேற்ப் பட்டப் பிரார்த்தனை.

நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் கஃபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்? என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் (இறைவனிடம் சிரம் பணிந்து கொண்டிருக்கும் பொழுது) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்)அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே (சிரம் பணிந்த நிலையிலேயே) க்கிடந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி ‘யா அல்லாஹ்! குறை»களை நீ கவனித்துக் கொள்வாயாக’ என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்கு எதிராக  நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறை»களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், ‘அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்’ என அவர்களும் நம்பியிருநதார்கள்…

பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, யா அல்லாஹ்! அபூஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்றுக் கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் ‘கலீப்’ என்ற பாழ்கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார்.ஆதாரம் புகாரி4:250

இத்தனைப் பெரிய அநீதிக்காக அல்லாஹ்விடம் கரம் உயர்த்தி அவனின் தூதர் கேட்டப் பிரார்த்தனைக்கு பதிலளித்து தீர்ப்புக் கூறிய அல்லாஹ் அது நிறைவேற்றப்படும் காலத்தை சுமார் பத்து வருடங்கள் பிற்படுத்தினான்.

நின்று நிறைவேற்றப்பட்டதால் உருவான  நன்மைகள்.

அண்ணல் அவர்கள் அநீதியாளர்களை அல்லாஹ்விடம் பெயர் கூறி ஒப்படைத்தப் பின்னர்

Ø  குரைஷிகளின் மக்களில் சிலரை சிறிது சிறிதாக அண்ணல் அவர்களின் சத்தியப்பிரச்சாரத்தில் இணையச் செய்கிறான்,

Ø  அவர்களை ஒருக் கூட்டமாக்குகிறான்,

Ø  அவர்கள் ஒருக் கூட்டமாகியதும் அவர்களுக்கு ஒரு நாட்டை (மதீனாவை) ஏற்படுத்துகிறான்.

Ø  அந்த நாட்டில் (மதீனாவில்) அவர்களை அதிபதியாக்குகிறான்.

Ø  அண்ணல் அவர்களின் பிடரியின் மீது ஒட்டகக் குடலை போட்டு அவர்கள் மூச்சுத் திணறுவதைக் கண்டு ரசித்த ஈரலில் ஈரமில்லாதவர்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் பத்ரு யுத்த களத்திற்கு ( வரமறுத்தவர்களையும்) கொண்டு வந்து சேர்க்கிறான்.

அவ்வாறு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள் அனைவரும் சாதாரண மக்கள் அல்ல,

Ø  அதிகாரத்தில் கோலோச்சுபவர்களாகவும்,

Ø  அன்றைய மக்களிடத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும்,

Ø  புத்தி கூர்மை மிக்க அபுல் ஹிக்கம் களாகளாகவும்,

Ø  போர் தந்திரிகளாகவும்,

Ø  எண்ணற்றப் போர்களில் வெற்றி வாகை சூடியவர்களாகவும் திகழ்ந்தவர்கள்.

மக்களில் செல்வாக்கு மிக்கவர்களை, அதிகாரத்தில் கோலோச்சியவர்களை போர் படை தளபதிகளை மாவீரர்களை மனிதர்களின் அரசனாகிய வலிமை மிக்க அல்லாஹ் மண்ணை கவ்வச் செய்து பாழும் கிணற்றில் வீசச் செய்தான். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது ஆணையாக நபி(ஸல) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் ‘கலீப்’ என்ற பாழ்கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார்.

அன்று அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அநீதியாளர்களை அல்லாஹ்விடம் பெயர் கூறி ஒப்படைத்த பொழுதே அநீதியாளர்களை அவ்விடத்திலேயே அழித்திடும் வல்லமை மிக்கவன் அல்லாஹ் என்பதை எல்லோரும் அறிந்திருக்கின்றோம் ஆனாலும் தாமதப்படுத்தியதன் மூலமாக பொறுமையின் பொக்கிஷமாகிய அண்ணல் அவர்களுக்கு ஏராளமான நன்மைகளை ஏற்படச் செய்தான் நீதியாளன் அல்லாஹ்.

Ø  பத்ரில் வெற்றியைக் கொடுத்தான்,

Ø  பத்ரில் பிடிக்கப்பட்டை கைதிகளில் எழுதப் படிக்கத் தெரிந்த கல்விமான்கள்; கிடைத்தனர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மூலமாக இஸ்லாமிய அணியினருக்கு கல்வி புகட்டப்பட்டது.

Ø  அப்பாஸ்(ரலி) போன்றவர்கள் பத்ரில் கண்ட சில அதிசயத்தக்க நிகழ்வுகளைப் பார்த்து பிரமித்துப் போய் இஸ்லாத்தை தழுவினர். (முந்தைய பிரார்த்தனையில் சுராக்கா அவர்களை இறைவன் பரிசாக்கினான், இந்தப் பிரார்த்தனையில் அப்பாஸ் ரலி போன்ற அறிஞர்களை பரிசாக்கினான். )

Ø  இந்த யுத்தத்தின் பிறகே மதினாவின் யூதர்கள் அரசின் கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைந்தனர்,

Ø  மதீனாவின் சுற்றுப்புறத்தில் உள்ள யூதர்களின் சிற்றரசுகள் மதீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

Ø  மதீனாவிற்கு வெளியில் உள்ள வல்லரசுகளின் பார்வை மதீனாவை நோக்கி திரும்பியது.

Ø  இதன் பின்னரே இந்தப் பொறுமையாளர்களைக் கொண்டு உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஏகஇறைவனாகிய அல்லாஹ் நேர்வழி காட்டச் செய்தான்

முஸீபத்துகளும் நீங்கும். .

Ø  நாமே ஆச்சரியத்தின் விளிம்பிற்கு செல்லுமளவிற்கு பல சம்பவங்கள் நம் வாழ்வில் நடப்பதுண்டு.

Ø  விபத்துகளிலிருந்து நூலிழையில் உயிர் பிழைத்திருப்போம்,

Ø  திருட்டு வழிப்பறியிலிருந்து தப்பித்திருப்போம்,

Ø  தீராத நோயென்று கைவிடப்பட்ட கேஸிலிருந்து நிவாரணம் பெற்றிருப்போம்,

Ø  எவரிடமிருந்தாவது ஏமாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்போம்,

இதுமாதிரியான சம்பவங்களின் போது அல்லாஹ்வே நம்மைக் காப்பாற்றினான் என்று நம்மை அறியாமல் நம்முடைய நாவு மொழியத் தொடங்கியதை ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏராளமான சம்பவங்கள் மூலம் உணர்ந்திருக்கின்றோம். கையேந்தியவரின் முஸீபத்துகளை இந்த வழிகளிலும் இறைவன் போக்குவான்.

மறுமையிலும் கிடைக்கும்.

இன்னும் இறைநம்பிக்கiயாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கை ஒன்றுடன் முடிவதில்லை, மாறாக இன்னுமொரு வாழ்க்கை மரணத்திற்குப்பின் உண்டு என்ற நம்பிக்கையில் தடம் புரளாமல் வாழ்பவர்  சொர்க்கம் செல்லும் அளவுக்கு நன்மைகள் அவரிடம் இல்லாமல் இருந்தால் துனியாவில் கேட்டப்  பிரார்த்தனைகளுக்கான கூலிகளை குறைவன்றி கொடுத்து சொர்க்கத்தில் நுழைவிப்பான் அல்லது நரகின் தண்டனை நாட்களை குறைப்பான் நீதியாளன் அல்லாஹ்.

Ø  நாம் கேட்டது உடனே இம்மையில் கிடைக்கும

Ø  நாம் கேட்டதற்கு ஈடாக தீங்கிலிருந்து நம்மை காப்பான்.

Ø  நாம் கேட்டதற்கு ஈடாக மறுமையில் கிடைக்கும்.

என்று அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: ஹாக்கிம்

படிப்பினைகள்

Ø  தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னார் தான் காரணம் என்று உறுதியாகத் தெரிந்தால் அவர்களின் பெயரைக்கூறி இறiவா! இன்னாரை நீ பார்த்துக்கொள் என்றுக்கூறி ஒப்படைத்து விட்டு பொறுமையை கை கொள்ள வேண்டும்.

Ø  இன்னார் தான் என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால்? எனக்கு அநீதி இழைத்தவர்களை இறiவா! நீ பார்த்துக்கொள் என்றுக்கூறி ஒப்படைத்து விட்டு பொறுமையை கை கொள்ள வேண்டும்.

Ø  தனது சொந்த தேவைகளுக்காக அல்லாஹ்வின் அருளை நாடினால் அதற்காகவும் பெறுமையை கை கொள்ள வேண்டும்

பிரார்த்திப்போரின் பிராரத்தனைகளில் எதை அன்றே நிறைவேற்றினால் அடியானுக்கு நன்மை பயக்கும், எதை நின்று (நிதானமாக) நிறைவேற்றினால் அதுவும் அடியானுக்கு நன்மை பயக்கும், என்கின்ற ஞானம் நிரம்பப் பெற்றவன் அல்லாஹ் என்பதால் அவைகள் நிறைவேறுவதற்கான காலத்தைக் குறித்து அந்தந்த நேரத்தில் அவைகளை தாமாக நிறைவேறச் செய்திடுவான்.

நான் பிரார்த்திக்கிறேன், எனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையே, என்றுக்கூறி அவசரப்படாத வரையில் உங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Courtesy : அதிரை ஏ.எம்.பாரூக்