Heartfelt Dua in Tamil…

யா அல்லாஹ்!

நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே!

தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே!

மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே!

கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே!

என் இரட்சகனே!

மகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறேன்!

துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக!

நான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக!

எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே!

நிச்சயமாக நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்!

என்னை படைத்தவனே!
என் வாழ்கையை உனது கரத்தில் வைத்திருப்பவனே!

என்னுடைய நற்பாக்கியமும், துர்பாக்கியமும் உன் கையிலே இருக்கின்றன!

ஏக இறைவா! என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி உடையதாக ஆக்குவாயாக!

இவ்வுலகமே எனக்கு ஒன்று சேர்ந்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று நீ எழுதி வைத்ததை தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று நான் ஈமான் கொண்டுள்ளேன்

உலகமெல்லாம் ஓன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்!

ஏக இறைவா! என் உள்ளத்தில்நிறைய தேவைகள் இருக்கின்றன!

உன்னையல்லால் வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது. என்னுடைய ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீ மட்டுமே அறிவாய்!

“குன்” ஆகுக என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே!
என்னுடைய விருப்பங்களை நோக்கி (குன்) “ஆகிவிடு” என்று சொல்வாயாக!

நீ என்னுடன் இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை.

எனக்கு நீ வழி காட்டு. என்னுடைய காரியங்களை நீ திட்டமிட்டு நிறைவேற்று.

நான் தவறான வழியில் செல்லும் போது என்னை நேரான வழியில் திருப்பிவிடு.

வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக!

யா அல்லாஹ் . . . . .
எங்கள் பாவங்களை மன்னித்து
விடு

யா அல்லாஹ் . . . .
நாங்கள் செய்த தவறுகளை
மன்னித்து விடு

யா அல்லாஹ் . . .
கப்ருடைய வேதனையிலிருந்து
நரக நெருப்பிலிருந்தும்
எங்களை பாதுகாப்பாயாக

யா அல்லாஹ்
இம்மையிலும்
மறுமையிலும்
வெற்றியை
தருவாயாக

இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக!

இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

இறைவா! பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

இறைவா பெருமானார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!

இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!

இறைவா! உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

இறைவா! மரண வேதனை, மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

இறைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

இறைவா! கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு த்ந்தருள்வாயாக!

இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

இறைவா! கியாமத் நாளில் இழிவுகளை விட்டும் எங்களை மூஃமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!

இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!

இறைவா! கியாமத்
நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

இறைவா! ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!

இறைவா! உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களை சொர்க்கத்தில் நுழைய செய்வாயாக!

ஆமீன்… ஆமீன்…

The wise words and pearls of our beloved Prophet (PBUH)

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ”நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

(அல்குர்ஆன் 2:156,157)

 

”ஒரு முஸ்லி­ம் மற்றொரு முஸ்­லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லி­மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்­லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி)  நூல்: புகாரி (2442)

Surah Nur – Verses 11-20 – Regarding Slander

24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?

24:13. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.

25:14.இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.

25:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

24:16. இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?

24:17. இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?

24:18. இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன். 

 

24:19. எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

24:20. இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.  

சோதனைகள்

மனிதர்களின் வாழ்க்கையில் சோதனைகள் என்பது அன்றாடம் நிகழக்கூடியதாகவே உள்ளது. முஸ்லிம்களின் செயல்கள் அனைத்தும் மறுமைக்காகவே உள்ளது. இவ்வுலக சோதனைகளில் மனமுடைந்து விடாமலிருக்க பின்வரும் குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் உதவும்.
‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று ( இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல்
விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான்.
பொய்யர்களையும் அறிவான்.

திருக்குர்ஆன் 29:2,3

ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 2323

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5030

“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5023

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6664

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

நூல் : முஸ்லிம் 188

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர் ; ( தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க , இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6069

” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 12:87

சொர்க்கப் பாதைகள்

1- ஏகத்துவமும் தூதுத்துவமும்
அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
(
நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)

2- அல்குர்ஆன்
அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் தூய்மையான கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு.
(
நபிமொழி, அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.
(
நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)

அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதிய மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அது அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதி)

குல் ஹுவல்லாஹு அஹத் சூராவை யாரேனும் பத்துத் தடவை முழுமையாக ஓதிமுடித்தால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அஹ்மத்)

3- அஸ்மாவுல் ஹுஸ்னா
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு -நூறில் ஒன்று குறைய- 99அழகிய பெயர்கள் உள்ளன. யார் அதனை மனனம் செய்துள்ளாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

4- திக்ருகள்
ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.
(
நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : திர்மிதீ)

உங்களில் யாரேனும் ஒருவர் முறையாக உளுச் செய்து, பிறகு
அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு
என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பிய வாயிலில் நுழைந்து கொள்ளலாம்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம்)

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்”என்பது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)

5- பிரார்த்தனை
சொர்க்கத்தை வேண்டி மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், இறைவா! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், இறைவா! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது.(நபிமொழி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ)

6- கல்வி
யாரேனும் ஒருவர் கல்வியைத் தேடிச் சென்றால் அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு சொர்க்கப் பாதையை எளிதாக்கிவிடுகின்றான்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

7- வணக்க வழிபாடுகளும் பொதுப்பணிகளும்
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் -எழுந்து- வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்!.
(
நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ்-ரலி, நூல் : திர்மிதீ)

8- பள்ளிவாயில் கட்டுதல்
காட்டுப் புறாவின் கூட்டைப் போன்றோ அல்லது அதனை விட சிறிய அளவிலோ யாரேனும் அல்லாஹ்வுக்காக பள்ளிவாயில் கட்டிக் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : இப்னுமாஜா)

9- அறப்போர்
சொர்க்கம், வாள்களின் நிழல்களுக்கு கீழே உள்ளது.
(
நபிமொழி, அறிவிப்பவர் : இப்னு அபீ அவ்ஃபா -ரலி,நூல் : புகாரீ)

10- தர்மம்
அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது. (நபிமொழி, அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி,நூல் : அஹ்மத்)

11- இரக்க சிந்தனை
ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி ஊற்றி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ)

12- அநாதைகளுக்கு ஆதரவு
தன் உறவினருடைய அனாதைக்கோ, அல்லது பிறருடைய அனாதைக்கோ பொறுப்பேற்றவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு -அருகில்- இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள்.
(
அறிவிப்பவர் :அபூஹுரைரா-ரலி, நூல்: முஸ்லிம்)

13- பெண் பிள்ளைகள்
இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.
(
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ)

14- இறையச்சமும் நற்குணமும்
எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள்? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள்,அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள். எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக நரகத்தில் நுழைவார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நாவின் காரணத்தாலும் இச்சை உறுப்பின் காரணத்தாலும்! என்றுபதிலளித்தார்கள்.
(
அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ)

15- கோபம் கொள்ளாமை
தன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்பிய ஹுருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்குவான்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அபூதாவூத்)

16- பெற்றோரைப் பேணல்
முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவனுடைய மூக்கு மண்ணோடு மண்ணாகட்டும்!
(
நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

17- மார்க்கச் சகோதரனை சந்திக்கச் செல்தல்
யாரேனும் நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது அல்லாஹ்வுக்காக மார்க்கச் சகோதரனை சந்திக்கச் சென்றால் -மலக்குமார்களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் இதனால் நீ சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! என்று கூறுவார். (நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி. நூல்:திர்மிதீ)

18- குழந்தைகளை இழந்தவர்கள்
மூன்று குழந்தைகளை இழந்தும் பொறுமையை கடைபிடித்தவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, இரண்டு குழந்தைகளை இழந்தவர்?என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டு குழந்தைகளை இழந்தவரும் தான் என்று கூறினார்கள். நான் ஒரு குழந்தையைப் பற்றிக் கேட்டிருக்கக் கூடாதா? என்று அப்பெண் கூறினார். (நூல் : நஸாயீ)

19- சோதனையில் பொறுமை
ஆதமின் மகனே! சோதனை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையைக் கடைபிடித்து,என்னிடத்தில் கூலியையும் எதிர்பார்த்தால் அதன் கூலியாக சொர்க்கத்தை தவிர வேறு எதனைத் தரவும் நான் விரும்ப மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : இப்னுமாஜா)

20- பெருமையும் கடனும் வேண்டாம்
பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூல் : திர்மிதீ)

21- ஈமானுடன் மரணம்
யார் நரகத்தை விட்டும் தூரமாகி, சொர்க்கத்தில் நுழைய விரும்புகின்ரோ அவருக்கு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கும் நிலையில் மரணம் வரட்டும். மேலும் தன்னிடம் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும்.
(
நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ் -ரலி, நூல் : முஸ்லிம்)

And Allaah knows best.

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். 


நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.  ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

“இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

– வாசகர்: இளைய வைகை

நாகாீக மங்கைகள்

அல்ஹம்துலில்லாஹ், இது எல்லா முஸ்லிம் சகோதரிகளுக்கு நல்ல உபதேசமாகவும் ஞாபகமூட்டலாகவும் அமையும் என     நினைக்கின்றேன்.

இந்த படத்தை பாருங்கள்.


இங்கே நிற்கும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் அணிந்திருப்பதும் ஃபர்தா தான். உலகை வெறுத்து சேவைகள் செய்யும் கன்னியாஸ்திரிகளால் தான் அவ்வாறு இருக்க முடியும், நம்மால் முடியாது எனும் முடிவுக்கு வந்து விட வேண்டாம். அருகே நிற்கும் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அவர்களும் ஃபர்தா அணிந்து தான் நிற்கின்றார். ஒரு நாட்டின் ஜனாதிபதி ஃபர்தா அணிந்து உலகின் பல நாடுகளுக்கும் சென்று வரும் போது நம்மால் முடியாதா?

அடுத்த படத்தை கவனியுங்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் ஃபர்தாவுடன் காட்சி அளிக்கின்றார்.கடற்கரையில் முழு நிர்வாணமாக கிடக்கும் கலாச்சாரத்தை கொண்ட இங்கிலாந்து நாட்டின் ராணி, வெளி இடங்களுக்கு செல்லும் போதும் உலக தலைவர்களை சந்திக்கும் போதும் இந்த உடையைத் தான் தேர்ந்தெடுக்கின்றார். ஏனெனில் இது தான் அவருக்கு கண்ணியமாக படுகின்றது. அவருக்கு மட்டுமல்ல உலகின் எந்தவொரு பெண் தலைவரும் ஆபாச ஆடைகளை கண்ணியமானவை என்று சொன்னதில்லை. எனவே சகோதரி மாஷா நஷீம் அவர்கள் முகம், முன் கைகளை தவிர பிற அவயங்களை மறைப்பது அவசியமானதாகும். அவ்வாறு உடலை மறைக்கும் போது அந்நியர்களின் கோரப் பார்வையிலிருந்தும் தவறான எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பு பெறுவதோடு இறைவனின் கட்டளையை நிறைவேற்றியதற்கான நன்மைகளையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அத்துடன் தனிமையில் பிற ஆண்களுடன் உரையாடுவது, கை குலுக்குவது, தந்தை அல்லது சகோதரனின் துணையின்றி நீண்ட தூரங்களுக்கு பயணம் செய்வது போன்றவற்றை தவிர்த்து கொள்ள வேண்டும். இவைகள் உங்கள் வளர்ச்சிக்கு தடையல்ல, வளர்ச்சிக்கான ஊக்கமே. ஏனெனில் இஸ்லாம் என்பது பிற மதங்களை போல் பெண்களை வீட்டில் முடக்கி போடும் மதமல்ல, பெண்களுக்கு அதிகமான உரிமைகளை பெற்று தந்துள்ள மார்க்கமாகும். நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவியும் மூமின்களின் அன்னையுமான ஆயிஷா(ரலி) அவர்கள், மிகப்பெரிய அறிஞராக இருந்தவர். அவரிடம் கல்வி கற்க ஆண்கள், பெண்கள் என்ற பேதமின்றி ஏராளமான ஸஹாபாக்கள் வந்து கொண்டே இருப்பர். ஆனால் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு ஃபர்தா முறையை பேணித் தான் அவர்கள் கல்வியை வழங்கினார்கள். கைகுலுக்குதல், தனிமை பயணம், வீண் பேச்சு இவை எதுவுமே அவர்களிடம் இருந்ததில்லை என்று வரலாறு கூறுகின்றது. எனவே அந்த அன்னையை முன்னுதாரணமாகக் கொண்டு தாங்களும் சென்று சாதனை படைக்க வேண்டுமென்பதே எங்களின் ஆவல். ஏனெனில் தங்களை தொடர்ந்து வர காத்திருக்கும் இஸ்லாமிய சகோதரிகள் ஏராளம். எனவே அதை உணர்ந்து இஸ்லாமிய வரம்பிற்குள் நின்று கொண்டு மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துகின்றேன்.

தங்களை நேரில் பார்க்காவிடினும் தங்களின் வளர்ச்சியையும் உயர்ச்சியையும் காண இறைவனிடம் மன்றாடும் ஏராளமான உள்ளங்கள் இங்கே இருக்கும் அதே வேளையில் உங்களின் வீழ்ச்சியை காணவும் இஸ்லாமிய வரம்பிலிருந்து தங்களை சிறிது சிறிதாக விலக்கவும் சில கூட்டங்கள் காத்துக் கொண்டிருப்பது நீங்கள் அறியாத உண்மை. அத்தகையவர்களிடமிருந்து இறைவன் தங்களையும் தங்களைப் போன்ற இஸ்லாமிய சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டும். தங்களுக்காக எனது பார்வையில்பட்ட ஃபர்தாவுக்குள் பிரபலங்கள்சிலரை பார்வைக்கு வைக்கின்றேன்.


உடல் அசைவுகளுக்கு இதுதான் சௌகரியம் என நினைத்து டூ பீஸ் எனும் ஒட்டுத் துணிகளை உடுத்து உலகளாவிய ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு மத்தியில் ஒரு பெண் உடலை மறைத்து தனது ஓட்டத்தை துவங்கினார். துவக்கத்தில் அவரை பார்த்து சிரிக்க வைத்தவரை இறுதியில் நாணி தலைய குனிய வைத்தார். அவர் தான் ருகையா என்ற பெண்மணி. பஹ்ரைன் நாட்டை சார்ந்த இவர் 200 மீட்டர் ஓட்டத்தில் பர்தா அணிந்து விளையாடி தங்கபதக்கம் பெற்று உலக சாதனை புரிந்தார்.



மடோனா நஜாரியன் என்ற இந்த மங்கைக்கு டென்னிஸில் சாதனை படைக்க ஃபர்தா தடையாக இருக்க வில்லை.

ஈரானிய மங்கைகள் அந்நிய ஆண்களுக்கு தங்கள் அவயங்களை காண்பிக்காமல் இந்த வருட ஒலிம்பிக்கில் கால்பந்து விளையாட முனைந்ததால் அவர்கள் ஆட அனுமதிக்கப்படவில்லை. ஆக, சௌகரியம் என்பது மனதை பொறுத்ததே. கண்ணியமான உடை என்றால் அது ஃபர்தா என்பதற்கு இன்னும் உதாரணம் வேண்டுமோ?

ரமளானின் மகிமை

புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.

ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.

இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:

அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்??

நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்??

நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்??

சுவனலோகத்தில் ?ரய்யான்? என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்??

நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.

படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்??

வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது??

ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்??

எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!

நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை

நோன்பு நோற்பது ஃபர்ளு ? கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.

நோன்பு நோற்பது ஃபர்ளு ? கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.

நோன்பின் நிய்யத்

நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.

தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:

நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.

நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

ஸஹர் ? நோன்புபிடிப்பது

ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.

ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.

இஃப்தார் ? நோன்பு திறப்பது

சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

மேகத்துடைய காலங்களில் இஃப்தார் ? நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் ? நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.

இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி ? பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.

நோன்பு திறக்கும் துஆ

அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

நோன்பின் முறித்தல்கள்

1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ?களா? செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.

நோன்புடைய கப்பாரா – பரிகாரமாகிறது.

தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.

நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிக்காதவைகள்

1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்?ஷன் ? டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.

நோன்பின் மக்ருஹ்கள்

1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.

இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.

நோன்பு வைக்காமலிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்

1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ?களா? செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ?களா? செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ?களா? செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 ? மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.

5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.

6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ?களா? செய்யவேண்டும்.

7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ?களா? செய்வது கட்டாயமுமாகும்.

8 மாதவிடாய் , நிபாஸ் ? பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ?களா? செய்வது கட்டாயமாகும்.

தராவீஹின் சட்டங்கள்

புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.

எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது ? குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.

குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.

இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.

வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.

ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.

குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் ? மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.

இஃதிகாப்

புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.

ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.

இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.

இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.

ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.

1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.

2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.

அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில்,
ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)
*

*அழகிய வரவேற்பு*
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு
வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது
நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும்
பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு
சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

*இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்*
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான
வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில்
மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

*நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்*
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது
மீட்டிப் பாருங்களேன்.

*விளையாட்டும் கவன ஈர்ப்பும்*
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ,
குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ
இருக்கலாம்.

இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு
வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள்
போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.

*வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ*
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம்
உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.

கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப்
படுத்துங்கள்.

*இனியவளின் ஆலோசனை*
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.

அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத்
தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள்
போன்றவை)

மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின்
கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.

ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

*பிறரைக் காணச் செல்லும்பொழுது*
மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம்
நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான
பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).

அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது
நல்லதல்ல.

*உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது*
மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில்
விடைபெறுங்கள்.

உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான
அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.

குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.

நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில்
போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான்
இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின்
மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.

திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக்
கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை
ஏற்படுத்தும்).

பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச்
செல்லலாம்.

*பொருளாதார உதவி*
கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல்
வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).

அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை
அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக்
கொள்ளுங்கள்.

அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான்
சிறந்தது.

*அழகும் நறுமணமும்*
நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை
நீக்கிவிடுவது.

எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

*தாம்பத்யம்*
மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில்
வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக்
கொள்ளலாம்).

பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான
பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு
ஆரம்பியுங்கள்.

இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம்
அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).

பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை
கடந்துவிடாதீர்கள்.

மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான
சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

*இரகசியங்களைப் பாதுகாத்தல்*
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம்
எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.

*இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது*
தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.

உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.

காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித்
தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.

இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.

ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச்
செல்லுங்கள்.

மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.

அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.

உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது
அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.

உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன்
இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.

*இஸ்லாமியப் பயிற்சி*
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால்
முடிந்த உதவிகளை செய்வது :

– இஸ்லாத்தின் அடிப்படை
– அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
– படித்தல் மற்றும் எழுதுதல்
– இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக
ஆர்வமூட்டுவது
– பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
– வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள்
வாங்குவது.

*மேன்மையான அக்கறை*
வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக்
கவனித்துக் கொள்வது.

மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய
மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக
இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

*அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது*
உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து
கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப்
பேசியிருக்கலாம்.

அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள்.
(ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக்
கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)

*பொறுமையும் சாந்தமும்*
மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான்
(வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு
உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய
விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும்
அளவுக்குச் சென்று விடுகிறது.

இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக
தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை
டி.வியில் பார்த்தல் இது போன்றவை.

உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.

*தவறுகளைத் திருத்துதல்*
முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.

அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப்
படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது)
அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில்
சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.

அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக
அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).

மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள்
மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்.

மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை
அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக
நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச்
சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த
அனுமதியைப் பயன்படுத்தலாம்.

குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு
நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான்
அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.

காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.

செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும்
ஈடுபடக் கூடாது.

*மன்னிப்பும் கண்டிப்பும்*
பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில்
தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின்
நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).

எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை
வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல்
உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).

சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள்.
நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால்
சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர
எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.

தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச்
சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக்
கொள்ளுங்கள்.

பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை
பொருத்திருங்கள்.

மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.

*உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!*

Courtesy : Mr. Abdul Rasheed Sait